தமிழ்நாடு

வேற லெவலில் கலக்கும் சென்னை MTC பேருந்துகள் : தமிழ்நாட்டின் பெருமிதம்.. மக்கள் உற்சாகம் !

செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆக. 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

வேற லெவலில் கலக்கும் சென்னை MTC பேருந்துகள் : தமிழ்நாட்டின் பெருமிதம்.. மக்கள் உற்சாகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடந்தாலும், செஸ் போட்டியின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆக. 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த போட்டியில், உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

வேற லெவலில் கலக்கும் சென்னை MTC பேருந்துகள் : தமிழ்நாட்டின் பெருமிதம்.. மக்கள் உற்சாகம் !

முன்னதாக, இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட நேரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு இந்த போட்டியை நடத்தும்" என்று கூறி, அதற்கான உறுதித்தொகையான ரூ.100 கோடியை செலுத்தி, இந்த பெரிய வாய்ப்பை, பெரிய பெருமையை தமிழ்நாட்டுக்கு பெற்று வந்தார்.

இந்நிலையில் அதன் தொடக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

வேற லெவலில் கலக்கும் சென்னை MTC பேருந்துகள் : தமிழ்நாட்டின் பெருமிதம்.. மக்கள் உற்சாகம் !

முக்கியமாக, வீரர்களை அழைத்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் எங்கு திரும்பினாலும், இந்த போட்டியின் லோகோவான வேட்டி-சட்டையுடன் கூடிய செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் குதிரை காய் வணக்கம் தெரிவிப்பதுபோல, தம்பி சின்னங்கள் தென்படுகிறது.

போட்டியில் பங்கேற்க வரும் சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தம்பி சின்னத்தின் முன்பு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

மேலும் இதுவரை இல்லாத அளவில், சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் 187 அணிகள் பொதுப்பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்துகொள்கின்றன. இதற்காக மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

வேற லெவலில் கலக்கும் சென்னை MTC பேருந்துகள் : தமிழ்நாட்டின் பெருமிதம்.. மக்கள் உற்சாகம் !

அதேபோல் இலவச பேருந்து மற்றும் வாகன சேவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். இந்த சேவையைத் தொடர்ந்து சென்னை மாநகர பேருந்துகளில் செஸ் போட்டினான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை நேப்பியர் பாலம் செஸ் விளம்பரத்தில் நிறைந்திருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் இத்தகைய ஏற்பாடுகள் தமிழர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories