தமிழ்நாடு

10 மணிக்குள் பள்ளிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தமா ? - உண்மை நிலையை வெளியிட்ட மக்கள் தொடர்புத்துறை!

காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் பொய்யானது என மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

10 மணிக்குள் பள்ளிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தமா ? - உண்மை நிலையை வெளியிட்ட மக்கள் தொடர்புத்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல் மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து வந்தனர்.

ஆனால், நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் கால விரையமும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

10 மணிக்குள் பள்ளிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தமா ? - உண்மை நிலையை வெளியிட்ட மக்கள் தொடர்புத்துறை!

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 25ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த மே மாதம் 25ஆம் தேதியன்று ஆசிரியர்கள் தங்களது செல்போனில் உள்ள பள்ளிக் கல்வித்துறை செயலி மூலம் விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

TNSED-Schools எனும் அந்த செயலி மூலம் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்புகளுக்கு அனுமதி கோருதல் போன்றவற்றை ஆசிரியர்கள் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் ஆசிரியர்களும் தங்கள் வருகைப் பதிவை தினமும் பள்ளிக் கல்வித்துறையின் இணைய தளமான EMISல் உள்ள பிரத்யேக செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால் சிலர் இதை திரித்து காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தவறான செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற செய்தி தவறானது என மக்கள் தொடர்புத்துறை உண்மை அறியும் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவுபடுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories