தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் உயர்வுக்குக் காரணமே மோடிதானே.. கேள்வி கேட்ட நபரை தாக்கிய பா.ஜ.க-வினர்!

பெட்ரோல், டீசல் உயர்வுக்குக் காரணமே மோடிதானே என கேள்வி கேட்ட நபரை பா.ஜ.கவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் உயர்வுக்குக் காரணமே மோடிதானே.. கேள்வி கேட்ட நபரை தாக்கிய பா.ஜ.க-வினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் மின் கட்டணம் மாற்றியமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கிருந்து நபர் ஒருவர் பெட்ரோல், டீசல் விலை எல்லாம் உயர்ந்து விட்டது. இதற்குக் காரணமே மோடி அரசுதான். இதைக் கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டம் நடத்துவீங்களா? என கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல் உயர்வுக்குக் காரணமே மோடிதானே.. கேள்வி கேட்ட நபரை தாக்கிய பா.ஜ.க-வினர்!

இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த பா.ஜ.கவினர் அந்த நபரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து போலிஸார் பா.ஜ.க தொண்டர்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் உயர்வுக்குக் காரணமே மோடிதானே.. கேள்வி கேட்ட நபரை தாக்கிய பா.ஜ.க-வினர்!

மேலும் மின் கட்டணம் மாற்றியமைத்தற்குப் போராட்டம் நடத்தும் பா.ஜ.க, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் போராட்டம் நடத்தவேண்டியதுதானே?. இதை விட்டுவிட்டு கேள்வி கேட்ட நபரைத் தாக்குவது என்ன நியாயம் என அங்கிருந்த பொதுமக்களும் பா.ஜ.கவினருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories