தமிழ்நாடு

'அம்மாவ ஏன் அடிக்கிற'.. தட்டிக்கேட்ட 14 வயது மகனை கொலை செய்த கொடூர தந்தை!

கடலூரில் மகனை அடித்து கொலை செய்த தந்தையை போலிஸார் கைது செய்துள்ளனர்.

'அம்மாவ ஏன் அடிக்கிற'.. தட்டிக்கேட்ட  14 வயது மகனை கொலை செய்த  கொடூர தந்தை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு அர்ஜூனன் (14) என்ற மகனும் லதா, நந்தினி என்ற இரண்டு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் குமார் தனது மனைவி சுமதியை அடித்துள்ளார். இதைக் கண்ட அவரது மகன் அர்ஜூனன் ஏன் அம்மாவை அடிக்கிறாய் என தட்டி கேட்டுள்ளார்.

'அம்மாவ ஏன் அடிக்கிற'.. தட்டிக்கேட்ட  14 வயது மகனை கொலை செய்த  கொடூர தந்தை!

இதனால் தந்தை மகனுக்கு இடையே சண்டை எழுந்தது. இதில் ஆவேசமடைந்த குமார் தான் பெற்ற மகன் என்றும் பாராமல் வீட்டிலிருந்த அம்மிக் கல்லை அர்ஜூனன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த போலிஸார் அங்கு வந்து அர்ஜூனன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'அம்மாவ ஏன் அடிக்கிற'.. தட்டிக்கேட்ட  14 வயது மகனை கொலை செய்த  கொடூர தந்தை!

பெற்ற மகன் என்றும் பாராமல் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories