தமிழ்நாடு

நடித்து கொண்டிருந்த போதே உயிரை விட்ட நாடகக்கலைஞர்.. கிராம மக்கள் முன்னிலையில் நடந்த சோகம்!

ஈரோட்டில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகக்கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடித்து கொண்டிருந்த போதே உயிரை விட்ட நாடகக்கலைஞர்..  கிராம மக்கள் முன்னிலையில் நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட குப்பன் துறை என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடைபெறுவது வழக்கம். இந்த நாடகத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜய்யன் என்பவர் முன்னின்று நடத்தி வந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் இந்த ஆண்டும் இரண்யா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகம் 5நாட்கள் தொடர்ந்து நடைபெறும். நேற்று இரவு கடைசி நாளுக்கான நாடகம் நடைபெற்றது.

நடித்து கொண்டிருந்த போதே உயிரை விட்ட நாடகக்கலைஞர்..  கிராம மக்கள் முன்னிலையில் நடந்த சோகம்!

அப்போது நாடகத்தில் நாரதர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ராஜய்யா திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது இறப்பிற்கு சக நாடக கலைஞர்களும் கிராம மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகக் கலைஞர் ஒருவர் சரித்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories