தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி வன்முறை; “கரூரில் இருந்த உங்களுக்கு அங்கு என்ன நடந்தது என்று தெரியுமா?”: நீதிபதி ஆவேசம்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 4 இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி வன்முறை;  “கரூரில் இருந்த உங்களுக்கு அங்கு என்ன  நடந்தது என்று தெரியுமா?”: நீதிபதி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கணியாவூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களையும் சூறையாடினர்.

இதனால் அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பள்ளி வாகனத்திற்கு தீ வைத்ததோடு காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். பின்னர் இந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கள்ளக்குறிச்சி வன்முறை;  “கரூரில் இருந்த உங்களுக்கு அங்கு என்ன  நடந்தது என்று தெரியுமா?”: நீதிபதி ஆவேசம்!

இதையடுத்து இந்த வன்முறையை கட்டுப்படுத்த அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு, உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி ஆகியோர் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்டனர்.

பின்னர், தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி தெரிவித்திருந்தார். அதோடு இந்த வன்முறையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி வன்முறை;  “கரூரில் இருந்த உங்களுக்கு அங்கு என்ன  நடந்தது என்று தெரியுமா?”: நீதிபதி ஆவேசம்!

இந்த நிலையில், மாணவி தற்கொலை விவகாரம் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த புரட்சிகர மாணவர் முன்னணி மாநில பொருளாளரான சுரேந்தர், இளைஞர் அமைப்பைச் சேர்ந்த சேர்ந்த சிவா, சங்கர், தமிழரசன் ஆகிய 4 பேரும், முகநூல், வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டதாக கூறி காவல்துறையினர் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த 4 பேரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி வன்முறை;  “கரூரில் இருந்த உங்களுக்கு அங்கு என்ன  நடந்தது என்று தெரியுமா?”: நீதிபதி ஆவேசம்!

அப்போது அவர்களை விசாரித்த நீதிபதி அம்பிகா, கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். அதாவது, “கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? உண்மை என்ன என தெரியாமல் எதற்காக போராட்டம் ? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாமா? கரூரில் இருக்கும் உங்களுக்கு கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது என்று தெரியுமா ? பொதுமக்கள் மாணவர்களை போராட்டத்திற்க்கு அழைக்கிறீர்கள்.. ஆனால் அதன் பின்விளைவு என்ன ஆகும் என்று தெரியுமா ?" என்று கேள்விகளை எழுப்பினார்.

இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இது போன்று தவறான கருத்துக்கள் பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories