தமிழ்நாடு

"நலமுடன் தொடர்கிறேன் பணியினை !" - கொரோனாவில் இருந்து மீண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை !

தான் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"நலமுடன் தொடர்கிறேன் பணியினை !" - கொரோனாவில் இருந்து மீண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்மையில் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார். இதையடுத்து பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தான் பூரண குணமடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " மக்களின் அன்பு..! மருத்துவர்களின் கனிவு..! நலமுடன் தொடர்கிறேன் பணியினை!

"நலமுடன் தொடர்கிறேன் பணியினை !" - கொரோனாவில் இருந்து மீண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை !

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும் தமிழ்நாட்டுப் பொதுமக்களுக்கும் உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"நலமுடன் தொடர்கிறேன் பணியினை !" - கொரோனாவில் இருந்து மீண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை !

தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு நலன் விசாரித்தனர். பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கடிதம் மூலமாக நலம் விசாரித்தனர். அந்தக் கடிதங்களை எல்லாம் தொடர்ந்து படித்து வருகிறேன். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையுடன் அந்தக் கடிதங்களும் உடலுக்கும் மனதுக்குத் தெம்பு தந்தது. எடுத்துக்காட்டாக, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் இருக்கும் பெரியசோரகையிலிருந்து தங்கராஜ் எனும் உடன்பிறப்பு எழுதிய கடிதத்தில், "எங்களின் சக்திவாய்ந்த திராவிட மாடல் முதலமைச்சரை எந்தச் சக்தியும் நெருங்காது" எனக் குறிப்பிட்டு, மிகுதியான அன்போடு, தனக்குத் தெரிந்த கை வைத்திய முறைகளையெல்லாம் குறிப்பிட்டு அனுப்பியிருந்தது நெகிழ வைத்தது. மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் காரணமாக நலமடைந்திருக்கிறேன் என்று தங்கராஜ் அவர்களுக்கு அதே அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

"நலமுடன் தொடர்கிறேன் பணியினை !" - கொரோனாவில் இருந்து மீண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை !

இதுபோல எண்ணற்ற கடிதங்கள் என் உடல்நலன் மேல் அக்கறை கொண்டு எழுதப்பட்டிருப்பதுடன், எனக்குள்ள பெரும் பொறுப்பையும் உணர்த்தக் கூடியதாக இருந்தது.

முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்பதால் இந்தக் கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருமலும் சளியும் மட்டும் இருந்ததால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

மருத்துவர் மோகன் காமேஸ்வரன், மருத்துவர் அரவிந்தன், மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவர் தீரஜ் என இந்த நான்கு மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் என்னை தினமும் நல்ல முறையில் கவனித்து, விரைந்து நலம் பெற உதவினார்கள். அவர்களுக்கும் அவர்களுடன் துணைநின்ற மருத்துவக் குழுவினருக்கும் இந்தக் கடிதத்தின் வாயிலாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"நலமுடன் தொடர்கிறேன் பணியினை !" - கொரோனாவில் இருந்து மீண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை !

நாளை (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. உங்களில் ஒருவனான என்னை நம்பி, தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பெரும் பொறுப்பினை உணர்ந்து, முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை, எடுக்க வேண்டிய முடிவுகளை, செயல்படுத்த வேண்டிய திட்டங்களை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories