தமிழ்நாடு

"வருக வருக தமிழ்நாட்டிற்கு வருக" : செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்! (video)

44-வது FIDE செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

"வருக வருக தமிழ்நாட்டிற்கு வருக" :  செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்! (video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் 44-வது FIDE செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை எனவும் டீஸரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

"வருக வருக தமிழ்நாட்டிற்கு வருக" என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாடலுடன் தொடங்கும் இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதா கடந்த மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோக மற்றும் சின்னத்தைச் சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

"வருக வருக தமிழ்நாட்டிற்கு வருக" :  செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த்! (video)

இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்தியா சார்வில் இந்த போட்டியில் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி, குகேஷ், சசிகிரண், அதிபன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories