தமிழ்நாடு

வன்முறையை கைவிடுங்கள்.. போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!

வன்முறையில் ஈடுபட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறையை கைவிடுங்கள்.. போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.

வன்முறையை கைவிடுங்கள்.. போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 2 எஸ்.பி 350 காவலர்கள் அங்கு உள்ளனர். இருந்தபோதிலும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்று உள்ளது.

கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலிசார் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றனர். அங்கு நடைபெற்ற வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வன்முறையை கைவிடுங்கள்.. போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு!

அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கலவரம் செய்தவர்கள் அங்கிருந்து உடனடியாக செல்ல வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த கட்ட விசாரணையில் தான் அங்கு என்ன நடைபெற்றது.மற்ற இடங்களில் இருக்கும் பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories