தமிழ்நாடு

சர்வதேச சைக்ளிங் போட்டியில் பங்கேற்கும் மாணவி.. ரூ.14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசளித்த கனிமொழி MP!

சர்வதேச சைக்ளிங் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைக்கு கனிமொழி எம்.பி ரூ.15 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசளித்து உற்சாகபடுத்தியுள்ளார்.

சர்வதேச சைக்ளிங் போட்டியில் பங்கேற்கும்  மாணவி.. ரூ.14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசளித்த கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. 12ம் வகுப்பு வகுப்பு படித்து வரும் இவர் தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர்.

இதனால், மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு சைக்ளிங் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கான சைக்கிள் வாங்குவதற்கு அவரிடம் போதுமான வசதியில்லாத காரணத்தினால் அந்த போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

சர்வதேச சைக்ளிங் போட்டியில் பங்கேற்கும்  மாணவி.. ரூ.14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசளித்த கனிமொழி MP!

இதையடுத்து மாணவி ஸ்ரீமதி, தூத்துக்குடி மக்களைவை உறுப்பினரும், தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி சந்தித்து தனக்கு உதவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து மாணவிக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கினார் கனிமொழி எம்.வி. இந்த இந்த சைக்கிளின் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார் ஸ்ரீமதி.

மேலும், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியிலும் கலந்துகொண்டு 3-ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார் ஸ்ரீமதி.

தற்போது இஸ்ரேலில் ஆகஸ்ட் மாதம் உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஸ்ரீமதியும் பங்கேற்கிறார். இந்நிலையில் ஸ்ரீமதிக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட டிராக் சைக்கிளை வாங்கி கனிமொழி எம்.பி உற்சாகப்படுத்தியுள்ளார்.

சர்வதேச சைக்ளிங் போட்டியில் பங்கேற்கும்  மாணவி.. ரூ.14 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை பரிசளித்த கனிமொழி MP!

இது குறித்து பேசிய மாணவி ஸ்ரீமதி, "முதலில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் தனக்கு கேட்டவுடன் சைக்கிள் வாங்கி கொடுத்து என்னை உற்காக படுத்தினார். தற்போது சர்வதேச போட்டிக்காக விலை உயர்த்த சைக்கிளை பரிசாக கொடுத்துள்ளார். நிச்சயம் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கனிமொழி எம்.பி-க்கு பெருமை சேர்ப்பேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories