தமிழ்நாடு

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த பிச்சைமாரி (42) இவர் கட்டிடம் கட்டும் கான்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் வருடம் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலிஸார் வழக்கு பதிவு செய்து பிச்சமாரியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் சிறுமியை பாலியல் செய்த பிச்சைமாரிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.மேலும் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடு வழங்கபரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories