தமிழ்நாடு

“மோடிஜி, அமித்ஷா 2 பேரும் இந்தியாவின் பெரிய அக்யூஸ்டுகள்”: பாஜக கூட்டத்தில் உண்மையை போட்டுடைத்த ராதாரவி!

இந்தியாவில் பெரிய 2 அக்யூஸ்டுங்க யார்னு கேட்டா அது மோடியும், அமித்ஷாவும்தான் என நடிகர் ராதாரவி பேசியது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மோடிஜி, அமித்ஷா 2 பேரும் இந்தியாவின் பெரிய அக்யூஸ்டுகள்”: பாஜக கூட்டத்தில் உண்மையை போட்டுடைத்த  ராதாரவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தினர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுக் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

மேலும் நடிகர் ராதாரவியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசும்போது பெரிய அக்யூஸ்டு மோடி ஜியும், அமித்ஷாவும்தான் என பேசியது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி பேசும்போது, "நம்மாளுங்க கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. அது என்னன்னா திடீர் திடீர்னு பார்த் மாதா கி ஜே-னு கோஷம் போடுவாங்க. இப்படி மூன்று முறை கோஷம் போடுவதால் நாம என்ன பேச வருகிறோம் என்பதே மறந்துடுது.

இந்தியாவில் இரண்டு பெரிய அக்யூஸ்டுகள் இருக்காங்க. ஒன்று யார்னா அது நம்ம மோடி ஜி. மற்றொன்று யார்னா அது அமித்ஷதான். இத எல்லோரும் நியாபகம் வச்சுக்கோங்க. இந்த இரண்டு பேரும் கரு அறுத்துருவாங்க ஜாக்கிரதை" என தெரிவித்துள்ளார்.

“மோடிஜி, அமித்ஷா 2 பேரும் இந்தியாவின் பெரிய அக்யூஸ்டுகள்”: பாஜக கூட்டத்தில் உண்மையை போட்டுடைத்த  ராதாரவி!

இவரின் அந்த பேச்சை கேட்டு அங்கிருந்த பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ச்சியாக இந்தியாவில் ஏற்பட்டு வரும் மதக்கலவரங்கள், வன்முறைகளுக்கு மோடி மற்றும் அமித்ஷாதான் காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், நடிகர் ராதாரவியின் பேச்சு ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது என பொதுமக்கள் முனுமுனுத்து வருகின்றனர். மேலும் இணையத்தில் நடிகர் ராதாரவியின் பேச்சு வைரலாகி பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories