தமிழ்நாடு

"கூவத்தூரில் முட்டி போட்டு முதல்வரான இ.பி.எஸ்." - காட்டமாக விமர்சித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள்..

"கூவத்தூரில் முட்டி போட்டு முதல்வரான இ.பி.எஸ்., அ.தி.மு.க. உங்க அப்பனோட கட்சி இல்லை.." என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க தொண்டர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"கூவத்தூரில் முட்டி போட்டு முதல்வரான இ.பி.எஸ்." - காட்டமாக விமர்சித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்னை தலைக்கு மேல் ஓடும் வெள்ளம் போல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக தொண்டர்கள் சிலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும், மற்ற சிலர் இ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாகவும் நிற்கின்றனர்.

மேலும் இந்த ஒற்றை தலைமை பிரச்னையை சுமூகமாக தீர்க்கலாம் என்று அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்களும், தொண்டர்களும் குழாயடி சண்டையை விட மோசமாக நடந்துகொண்டனர். இதில் பலரும் இரத்த காயங்களுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

"கூவத்தூரில் முட்டி போட்டு முதல்வரான இ.பி.எஸ்." - காட்டமாக விமர்சித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள்..

இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'போங்கடா நீங்களும் உங்க பதவியும்' என்பது போல் அதிமுகவில் இனி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பே கிடையாது என்று திட்டவட்டமாக முடிவெடுத்தனர். இதையடுத்து ஒரு தரப்பினர் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் இ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாகவும் சுவரொட்டிகள் கோஷங்கள் எழுப்பி ரகளைகள் செய்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக மாணவர் அணி இணை செயலாளர் சிவாதேவன், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். அந்த சுவரொட்டியில் தற்போது மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"கூவத்தூரில் முட்டி போட்டு முதல்வரான இ.பி.எஸ்." - காட்டமாக விமர்சித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள்..

அதில், "அம்மாவால் மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவில் அவமானப்படுத்தி கொலை வெறித் தாக்குதல் நடத்திய கயவர்களை கண்டித்தும்... கூவத்தூரில் முட்டிபோட்டு முதல்வரான ஈனப்பிறவி எடப்பாடி பழனிசாமி, அதிமுக உங்கள் அப்பனோட கட்சி இல்லை, உனக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடும் வார்த்தைகளால் வசைப்பாடி வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர்கள் பரமக்குடி நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் கொந்தளித்து காணப்படுகின்றனர். இதனால் மீண்டும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.-க்கு இடையே Semi-Final மேட்ச் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுமக்கள் முணுமுணுக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories