தமிழ்நாடு

‘நாங்களே தீர்மானம் போட்டு நாங்களே நிராகரிப்போம்’ : சொப்பு சாமான் விளையாட்டாகி போன அ.தி.மு.க பொதுக்குழு!

அ.தி.மு.க பொதுகுழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஒ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நாங்களே தீர்மானம் போட்டு நாங்களே நிராகரிப்போம்’ : சொப்பு சாமான் விளையாட்டாகி போன அ.தி.மு.க பொதுக்குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர்கள் நிர்ணயித்த தீர்மானத்தை அவர்களே நிராகரித்ததும், ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்ததும், கட்சியின் தொண்டர்களே கட்சி ஒருங்கிணைப்பாளரை துரோகி என்றும், ஒழிக என்றும் கோஷமிட்டதும் போதுமக்களிடையேயும், அக்கட்சியின் தொண்டர்களிடையேயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுகவில் நடந்தது என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையின் கீழ் அ.தி.மு.க செயல்பட வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை உச்சத்தை எட்டியது.

‘நாங்களே தீர்மானம் போட்டு நாங்களே நிராகரிப்போம்’ : சொப்பு சாமான் விளையாட்டாகி போன அ.தி.மு.க பொதுக்குழு!

இதனால் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மூத்த கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.மேலும் இதனிடையே ஒ.பி.எஸ்-க்கு ஆதரவளித்த முக்கிய நிர்வாகிகள் இ.பி.எஸ்-ஐ சந்தித்து அவருக்கு ஆதரவளித்தனர்.

பின்னர் தனது கடைசி முயற்சியாக அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றால் கலவரம் வரலாம் என்பதால் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஒ.பி.எஸ் ஆதரவாளர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தனி நீதிபதி நிராகரித்த நிலையில், ஒ.பி.எஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

விடிய விடிய நடைபெற்ற இந்த வழக்கில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கலாம் ஆனால் அது குறித்த தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘நாங்களே தீர்மானம் போட்டு நாங்களே நிராகரிப்போம்’ : சொப்பு சாமான் விளையாட்டாகி போன அ.தி.மு.க பொதுக்குழு!

இந்த நிலையில் இன்று அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. ஒ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜெ.சி.பி. பிரபாகரன் ஆகியோருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெ.சி.பி. பிரபாகரன் மேடையில் இருந்து கீழே இறங்கினார்.

இதன் பின்னரே எந்த கட்சியிலும் நடக்காத உச்சபட்ச காட்சிகள் அங்கு நடந்தேறியது. இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் என இரண்டு தரப்பு ஆதரவாளர்களாலும் முன்வைக்கப்பட்ட 23 தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்டன.

இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் முன்வைத்து நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் 23 தீர்மானங்களும் பொதுக்குழுவால் நிராகரிக்கப்பட்டதாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். மேலும் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்தார்.

‘நாங்களே தீர்மானம் போட்டு நாங்களே நிராகரிப்போம்’ : சொப்பு சாமான் விளையாட்டாகி போன அ.தி.மு.க பொதுக்குழு!

இதன் பின்னர் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் முறைப்படி அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை குறித்து அளித்த கடிதத்தை அவர் மேடையில் வாசித்தார்.

பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-தேதிக்கு பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

இதனிடையே ஒ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு என முழக்கமிட்டு பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். மேலும் ஜூலை 11-தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழு அறிவிப்பு செல்லாது எனவும், அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் எனவும் கூறினார். இதன் காரணமாக அதிமுக பொதுகுழுவில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஒ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories