இந்தியா

அயோத்தி நதியில் மனைவியுடன் Romance.. ரவுண்டு கட்டி அடித்த இளைஞர்கள்: காரணம் என்ன?

தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த இளைஞரை அருகில் இருந்தவர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையாகியுள்ளது.

அயோத்தி நதியில் மனைவியுடன் Romance.. ரவுண்டு கட்டி அடித்த இளைஞர்கள்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சராயு என்ற நதி இருக்கிறது. இந்த நதியை அங்கிருக்கும் பலரும் தெய்வமாக வழிபடுகின்றனர். புனித நதியாக கருதப்படும் சராயு நதியில் நீராடி வழிபட்டால், நமது பாவங்கள் விலகும் என்பது ஒரு நம்பிக்கை.

இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் அங்கு நீராட சென்றுள்ளார். இருவரும் பேசி சிரித்துக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த பெண், தனது கணவரை ஆசையாக முத்தமிட முயன்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த ஒருவர், அந்த இளைஞரை அவரது மனைவியின் முன்பே பளார் என்று கன்னத்தில் அறைந்தார்.

இவரை தொடர்ந்து, அங்கிருந்த மற்றவர்களும் அவரை சூழ்ந்து சரமாரியாக தாக்கினர். அவரது மனைவி அவரை காப்பாற்ற முற்பட்டபோது, அவரையும் அங்கிருந்தவர்கள் வசைபாடினர். பின்னர் அங்கிருந்த மற்ற சிலர், அந்த இளைஞரை காப்பாற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டார். இது குறித்து விசாரித்த போது, புனிதமாக கருதும் சராயு நதியில், அவர்கள் ஆபாசமாக நடந்து கொண்டதால் அந்த இளைஞரை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

அயோத்தி நதியில் மனைவியுடன் Romance.. ரவுண்டு கட்டி அடித்த இளைஞர்கள்: காரணம் என்ன?

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அயோத்தியை சேர்ந்த எஸ்.எஸ்.பி. ஷைலேஷ் பாண்டே கூறுகையில், "தாக்குதல் குறித்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றாலும், தானாக முன்வந்து வழக்கை எடுத்து, தம்பதிகள் மற்றும் அவர்களை தாக்கியவர்களைக் கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று உறுதியளித்தார்.

banner

Related Stories

Related Stories