தமிழ்நாடு

“அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்” : சட்டத்துறை அமைச்சர் பேச்சு!

அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

“அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்” : சட்டத்துறை அமைச்சர் பேச்சு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில். புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் திருஉருவ சிலைக்கு அவரது நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில்:-

அ.தி.மு.க பொதுக்குழு விவாகரத்தில் அதிகாலை வரை விவாதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய விவகாரத்தில், நீதிபதிகள் தீர்ப்புகளில் நாங்கள் என்றுமே குறிக்கிடுவதில்லை. அதுகுறித்த விமர்சனமும் செய்யும் உரிமையும் நமக்கு இல்லை; இது குறித்து மேல் முறையீடு செய்து அவர்கள்தான் விமர்சிக்கலாம்.

“அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்” : சட்டத்துறை அமைச்சர் பேச்சு!

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தனிமனிதர்கள் விமர்சிப்பது சரியாக இருக்காது. இப்ப உள்ள அ.தி.மு.க. தலைமை குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இன்று நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழுவை முன்னிட்டு அவர்கள் மனு கொடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டதன் அடிப்படையில், இன்று அங்கு போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் தானாக அங்கு போகவில்லை. இரண்டு தரப்பினரும் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்ததன் அடிப்படையில், பாதுகாப்புக்காக போலிஸார் அங்கு சென்றுள்ளனர். அப்படி அவர்கள் பாதுகாப்பு கேட்கும் போது காவல்துறையினர் அங்கு செல்லாவிட்டால் வேண்டுமென்றே குற்றம் சாட்டுவார்கள்.

“அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்” : சட்டத்துறை அமைச்சர் பேச்சு!

அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அப்போதைய அ.தி.மு.க-விற்க்கும் இப்போதைய அ.தி.மு.க-விற்கும் சம்பந்தமே இல்லை. அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories