தமிழ்நாடு

“நான் ரெடி.. அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?” : சவால் விடுத்த அமைச்சர் மூர்த்தி !

தன் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்தால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயார். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என அமைச்சர் மூர்த்தி சவால் விடுத்துள்ளார்.

“நான் ரெடி.. அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?” : சவால் விடுத்த அமைச்சர் மூர்த்தி  !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“முன்னாள் காக்கியும் இந்நாள் சங்கியும்” - (இப்படி நாம் கூறவில்லை; திருப்பூரில் அவரது கட்சிக்காரர்களே சூட்டியபட்டமிது!) தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழக பா.ஜ.க.வுக்கு வந்ததிலிருந்து, அவர் நடத்திடும் அரைவேக்காட்டு அரசியல் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு பிரச்சாரம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றிய அரசை, மக்கள் அனைவரும் சாடிக் கொண்டிருக்கையில், தமிழக அரசையும், கழகத்தையும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவரின் அரசியல் அரை வேக்காட்டுத் தனம், பா.ஜ.கவினரை வெளியே தலைகாட்ட முடியாது நிலைக்கு தள்ளியிருக்கிறது.

“நான் ரெடி.. அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?” : சவால் விடுத்த அமைச்சர் மூர்த்தி  !

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பத்திரபதிவுத்துறை அமைச்சர், பணம் வாங்கிக்கொண்டு ஒரேநாளில் சார்பதிவாளருக்கு பணியிட மாறுதல் செய்ததாக ஆதரமில்லாத குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

பொதுவாக ஊடங்களில் தன்னுடைய பெயர் எப்படியாவது வந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் உண்மைக்கு புறம்பான விசயங்களை பேசி வருகிறார். அந்தவகையில், பொய்புகார்களை கூறிய அண்ணாமலைக்கு, அமைச்சர் மூர்த்தி சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்து வருகிறார்.

“நான் ரெடி.. அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?” : சவால் விடுத்த அமைச்சர் மூர்த்தி  !

பணியிட மாறுதல் செய்யப்பட்ட சார் பதிவாளர் திண்டுக்கல்லில் 25 நாட்கள் பணியாற்றிய பிறகே மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தேவைப்பட்டால் எந்த அதிகாரியையும் எப்போது வேண்டுமானாலும் பணியிடமாறுதல் செய்யும் உரிமையும், அதனை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு.

தன் மீது சுமத்திய குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வாரா?” என சவால் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories