தமிழ்நாடு

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த குடும்பம்.. 6 வயது சிறுவன் பரிதாப பலி!

புவனகிரி அருகே பலாப்பழம் சாப்பிட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த குடும்பம்.. 6 வயது சிறுவன் பரிதாப பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே கஸ்பா ஆலம்பாடி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மனைவி பரணி. இவர்களுக்கு இனியா (8), பரணிதரன் (6) என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேல்முருகன் தனது மனைவி மற்றும் மகன் பரணிதரனுடன் பலாப்பழம் சாப்பிட்டுள்ளார். பின்னர் குளிர்பானம் குடித்த அவர்கள், தயிர் சாதத்தையும் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த குடும்பம்.. 6 வயது சிறுவன் பரிதாப பலி!

இதன் பின்னர் சற்று நேரத்தில் மூவரும் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதையடுத்து 3 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூவரும் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த குடும்பம்.. 6 வயது சிறுவன் பரிதாப பலி!

அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் பரணிதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories