தமிழ்நாடு

“ஆத்திரத்தில் விபரீத முடிவு.. மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை” : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஆத்திரத்தில் விபரீத முடிவு.. மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை” : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள். இவருக்கு அழகுராஜா (வயது17) மற்றும் சிவகுமார் (வயது 16) என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில், 29.03.2017 அன்று இரு மகன்களும் மடிக்கணினிக்கு சண்டை போட்டதில் தாய் பேச்சியம்மாள் அழகுராஜாவை தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த அழகுராஜா தாய் பேச்சியம்மாளை கட்டையால் தாக்கிய போது, ஆத்திரம் அடைந்த தாய் மகன் அழகுராஜாவை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகன் அழகுராஜா பலியானார்.

“ஆத்திரத்தில் விபரீத முடிவு.. மகனை வெட்டிக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை” : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணை முடிவுற்று மகனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தாய் பேசியம்மாள் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு மகனைக் அரிவாளால் வெட்டி கொன்ற தாய் பேச்சியம்மாளுக்கு ஆயுள் தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் அதை கட்டத்தவறினால் மேலும் ஆறு மாத கால மெய்க் காவல் சிறை தண்டனையும் விதித்து பெரியகுளத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சிங்கராஜ் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளி பேச்சியம்மாளை காவல்துறையினர் பாதுகாப்புடன் சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.

banner

Related Stories

Related Stories