தமிழ்நாடு

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ஒன்றிய இணை அமைச்சர்: காரணம் என்ன?

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ஒன்றிய இணை அமைச்சர்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய இணையமையச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு சென்ற அவர் , விமான நிலையத்துக்கு உள்ளே செல்ல முயன்றுள்ளார். அப்போது அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஒரு சில நிமிடங்கள் உள்ளே விடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட அவர் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். ஒன்றிய இணை அமைச்சர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ஒன்றிய இணை அமைச்சர்: காரணம் என்ன?

இந்தநிலையில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்ட காரணம் வெளியாகியுள்ளது.அதன் படி எல்.முருகன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல ஏற்கனவே முன்அனுமதி பெற்றுள்ளனர்.

ஆனால், அந்த அனுமதி அட்டையை வைத்திருந்த நபர்கள் வர தாமதமானதால் எல்.முருகனுக்கும் உள்ளே வர அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories