தமிழ்நாடு

வாழ்ந்தால் இருவரும் வாழ்வோம் -இல்லை என்றால்.. விபரீத முடிவெடுத்த மூத்த தம்பதி!

திருவண்ணாமலையில், மூத்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்ந்தால் இருவரும் வாழ்வோம் -இல்லை என்றால்.. விபரீத முடிவெடுத்த மூத்த தம்பதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், சட்டுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜலு. இவரது மனைவி தனலட்சுமி. மூத்த தம்பதிகளான இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10 தேதி தவறி கீழே விழுந்த தனலட்சுமிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சைக்காகத் தம்பதிகள் மருகன் வீட்டில் தங்கியுள்ளனர்

வாழ்ந்தால் இருவரும் வாழ்வோம் -இல்லை என்றால்.. விபரீத முடிவெடுத்த மூத்த தம்பதி!

இதையடுத்து தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இதற்கிடையில், உனக்கு ஏதாவது நடந்து விட்டால் தனியாக எப்படி வாழ்வது என கணவர் வரதராஜலு, தனலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் மனவேதனையடைந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்காக அனுப்பிவைத்தனர்.

வாழ்ந்தால் இருவரும் வாழ்வோம் -இல்லை என்றால்.. விபரீத முடிவெடுத்த மூத்த தம்பதி!

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிமை பயத்தால் மூத்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories