தமிழ்நாடு

பற்றி எரிந்த காரில் சிக்கிய 2 பேர்.. துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்ட அமைச்சர் - குவியும் பாராட்டு!

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் சிக்கியவர்களை உணவு துறை அமைச்சர் சக்கரபாணி பாதுகாப்பாக மீட்டுள்ளார்.

பற்றி எரிந்த காரில் சிக்கிய 2 பேர்.. துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்ட அமைச்சர் - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனக்கு சொந்தமான காரில் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கார் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தாராபுரம் வந்தபோது திடீரென தீப்பிடித்துள்ளது.

இதனால் காரில் இருந்த வேல்முருகன் மற்றும் அவரது நண்பர் ஜெகநாதன் ஆகியோர் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் சக்கரபாணி தனது காரை நிறுத்தி உடனே மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இதையடுத்து வேல்முருகன், ஜெகநாதன் ஆகிய இருவரும் பத்திரமா மீட்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அமைச்சர் சக்கரபாணி வேறு ஒரு காரை வரவழைத்து இருவரையும் அதில் மதுரைக்குப் பத்திரமாக அனுப்பிவைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து அமைச்சருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories