தமிழ்நாடு

“வகுப்பறைக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல்.. TC தரமறுத்தால் கடும் நடவடிக்கை” : அமைச்சர் எச்சரிக்கை!

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தர படமாட்டாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

“வகுப்பறைக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல்.. TC தரமறுத்தால் கடும் நடவடிக்கை” : அமைச்சர் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துக்கொண்டு பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறோம். வரும் கல்வி ஆண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.

மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளதால் 11,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்து 5 நாட்கள் வகுப்புகள் நடக்காது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல்துறை அதிகாரிகள் மூலம் தினமும் 2 மணி நேரம் உளவியல் பயிற்சிகள் வழங்கப்படும்.

மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு செல்போன் எடுத்துவரக்கூடாது. அதனை மீறி, வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தர படமாட்டாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories