தமிழ்நாடு

"ஆளுநரின் பேச்சு தேசத்திற்கு நல்லதல்ல".. தொல். திருமாவளவன் கடும் சாடல்!

ஆளுநரின் ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல என வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"ஆளுநரின் பேச்சு தேசத்திற்கு நல்லதல்ல".. தொல். திருமாவளவன் கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கம் சார்பில் மனித சங்கலி இயக்கம் நடைபெற்றது. இதில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தொல். திருமாவளவன், "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தில் உள்ள வயது வரம்பு 18 ஆக உயர்த்த வேண்டும். குழந்தைகள் கல்வி மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்தியா முழுவதும் நுபுல் சர்மாவையும் நவீன் ஜிண்டாலை கைது செய்ய வேண்டும் என்று மட்டும் போராட்டம் நடைபெறவில்லை. அவர்களின் மத வெறுப்பு அரசியலுக்கு எதிராக தான் மக்கள் போராடுகிறார்கள்.

சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று ஆளுநர் ரவி அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டவர் என்பதை 100 சதவீதம் காட்டியுள்ளது.மேலும், ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல. அவர் வகிக்கும் பொறுப்புகளுக்கும் நல்லதல்ல" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories