தமிழ்நாடு

நேரில் சென்று வலியுறுத்திய முதல்வர் : ஆளுநர் RN ரவி முன் காத்திருக்கும் 21 மசோதாக்கள் என்னென்ன?

தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட 21 சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவி முன் காத்திருக்கின்றன.

நேரில் சென்று வலியுறுத்திய முதல்வர் : ஆளுநர் RN ரவி முன் காத்திருக்கும் 21 மசோதாக்கள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்டமசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இந்த சட்டமசோதாக்களை விரைந்து அனுப்பிவைக்கக் கோரி ஜூன் 2ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆளுநர் ஆர்.என். ரவி முன் காத்திருக்கும் 21 சட்ட மசோதாக்கள் என்னென்ன இங்கு பார்ப்போம்:-

1. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020. (வேந்தருக்குப் பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குதல்)

2. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020. (ஆய்வு அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குதல்)

3. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (இரண்டாவது திருத்தம்) சட்டம், 2022. சில விதிகளைத் திருத்தவும், பதவிக் காலத்தைக் குறைக்கவும்)

4. தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2022. (உயர் கல்வித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).

5. சென்னைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022. (பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரை நியமிப்பதற்கும், நிதிச் செயலாளரை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகச் சேர்ப்பதற்கும்)

6. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2022, (சென்னைக்கு அருகில் தனி சித்த பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் ).

7. தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் (இரண்டாம் திருத்தம்) மசோதா, 2022. (மதுரை,கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஓசூர் நகர்ப்புற ஒருங்கிணைப்பு)

8. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2022 , (பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).

9. தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் (திருத்தம்) மசோதா, 2022. ( ஆங்கிலோ இந்திய சமூகம்)

10. தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்த மசோதா, 2022.

11. தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, 2022.

12. தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (திருத்தம்) மசோதா, 2022 (துணை வேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்)

13. தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி (திருத்தம்) மசோதா, 2022

14. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) மசோதா, 2022

15. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாவது திருத்தம்) மசோதா, 2022

16. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் (நான்காவது திருத்தம்) மசோதா, 2022

17. தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னைப் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் (திருத்தம்) மசோதா, 2022.

18. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022 (பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).

19. தமிழ்நாடு ரத்துச் சட்டம், 2022 (காலாவதியான மற்றும் தேவையற்ற சட்டங்களை ரத்து செய்ய).

20. தமிழ்நாடு தடுப்புச் சட்டத்தில் திருத்தம். (தங்கள் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்களைத் தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பாக மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை வழங்குதல்)

21. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு (திருத்தம்) மசோதா, 2022 (உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவித்தல்) - ஆகியவைதான் நிலுவையில் உள்ளவை ஆகும்.

banner

Related Stories

Related Stories