தமிழ்நாடு

அண்ணாமலையை பேட்டி எடுக்கும்போது செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க-வினர்.. பத்திரிகையாளர்கள் கண்டனம்!

நாமக்கலில், செய்தியாளரை பா.ஜ.கவினர் தாக்கிய சம்பவத்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலையை பேட்டி எடுக்கும்போது செய்தியாளரை தாக்கிய பா.ஜ.க-வினர்.. பத்திரிகையாளர்கள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை சென்றுள்ளார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜா என்பவர் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அண்ணாமலையுடன் இருந்த பா.ஜ.க வினர் செய்தியாளரை பேட்டி எடுக்க விடாமல் தடுத்துள்ளனர். மேலும் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் செய்தியாளரை ஒருமையில் திட்டியுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்த போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பா.ஜ.கவினரிடம் இருந்து செய்தியாளரை மீட்டுள்ளனர். செய்தியாளரை தாக்கிய பா.ஜ.கவினருக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.

மேலும் செய்தியாளரை தாக்கிய பா.ஜ.கவினர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories