தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிய கொரோனா தொற்று?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?

தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய கொரோனா தொற்று?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் புத்தக கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர் நாசர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் மாவட்டம் அளவில் புத்தக கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், ஊராட்சியில் இது தான் முதல் புத்தக கண்காட்சி. இங்கு வருபவர்கள் இங்கே அமர்ந்து புத்தகங்களைப் படிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று தென்பட தொடங்கி இருக்கிறது. ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய பரிசோதனை மையத்துக்கு 150 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று அதன் முடிவுகள் வெளிவந்தது. அதில் 12 பேருக்கு புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, BA4 என்ற புதிய வகை தொற்று 4 பேருக்கும், BA5 என்ற புதிய வகைவகை தொற்று 8 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

புதிய கொரோனா தொற்று பாதித்த 12 பேரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். அவர்களின் தொடர்பில் இறந்தவர்களையும் பரிசோதனை எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அண்ணாமலை அறிவுப்பூர்வமாகக் குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன் ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பாகவே அதில் முறைகேடு நடைபெற்று உள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசி வருகிறார். முறைகேடு நடந்து இருந்தால் அதனை அவர் நிரூபிக்க வேண்டும்.

மேலும், டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று உள்ளது,நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்குப் பின்னரே அந்த டெண்டர் ஓபன் செய்யப்பட உள்ளது. தவறு நடைபெற்று உள்ளது என நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories