தமிழ்நாடு

மகிழ்ச்சியாககுளித்த 7 சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்.. கெடிலம் ஆற்றில் நடந்த சோகம்!

கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சியாககுளித்த 7 சிறுமிகளுக்கு  நேர்ந்த துயரம்.. கெடிலம் ஆற்றில் நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் குச்சிபாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இங்குக் கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் 8 பேர் குளிக்கச் சென்றுள்ளனர்.

அதில் ஏழு பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கிக் குளித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற சுமந்தா,பிரியா , நவநீதா, ஆகிய மூன்று இளம் பெண்களும், சங்கீதா , மோனிஷா , திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகிய நான்கு சிறுமிகள் என மொத்தம் 7 பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இது குறித்து போலிஸாருக்கும் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7 பேரையும் சடலமாக மீட்டுள்ளனர். பிறகு அவர்களது உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்கச் சென்ற 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories