தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு பணிந்த ஒன்றிய அரசு.. 5 நாளில் GST நிலுவைத் தொகை விடுவிப்பு!

தமிழ்நாட்டிற்கான 9,602 கோடி ரூபாய் GST நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கோரிக்கைக்கு பணிந்த ஒன்றிய அரசு..  5 நாளில் GST நிலுவைத் தொகை விடுவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டிற்கான GST நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தொடர்ச்சியாகக் கடிதம் மூலம் வலியுறுத்தி வந்தார்.

மேலும் கடந்த மாதம் ஏப்ரல் 1ம் தேதி மூன்றுநாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டினுடைய மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

அதில்,GST நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். ஜூன் 2022-க்குப் பின்பு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து 31,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திற்கான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மே 26ம் தேதி சென்னை வந்திருந்தார். இந்த விழா மேடையில் பேசும் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதில் ஒன்று ஜி.எஸ்.டி தொடர்பான கோரிக்கை. பல்வேறு மாநிலங்களில் நிதி நிலைமை சீராகாத நிலையில், GST இழப்பீடு காலத்தை ஜூன் 2022க்கு பின்னரும், குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து தரவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான ரூ.9,602 கோடி ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு ரூ.86,912 கோடி ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு.

சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்த 5 நாளில் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories