தமிழ்நாடு

பா.ஜ.கவுக்கு ஆதரவாக முகநூல் பதிவு.. குவிந்த புகார் - காவலர் மீது நடவடிக்கை எடுத்து எஸ்.பி அதிரடி!

பா.ஜ.க செய்திகளை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்த போலிஸாரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ.கவுக்கு ஆதரவாக முகநூல் பதிவு.. குவிந்த புகார் - காவலர் மீது நடவடிக்கை எடுத்து எஸ்.பி அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அம்பாத்துரை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ச்சியாக பா.ஜ.க கட்சி தொடர்பான செய்திகளைப் பதிவிட்டும், பகிர்ந்தும் வந்துள்ளார்.

அதேபோல் இந்துத்துவா கருத்துகளையும் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவர் மீது தொடர்ச்சிய புகார் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவரின் சமூக வலைதளப் பக்கத்தை போலிஸார் ஆய்வு செய்தபோது, ஒரு சார்பாகவே அனைத்து பதிவுகளும் இருந்தது தெரியவந்தது.

பின்னர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் காவல் சுரேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்கள் எந்த கட்சி மற்றும் மதங்களைச் சாராதவராக நடுநிலையோடு இருந்து பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories