தமிழ்நாடு

பாடிக்கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்.. சரிந்து விழுந்த பின்னணி பாடகர் - சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! Video

கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர், மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடிக்கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்.. சரிந்து விழுந்த பின்னணி பாடகர் - சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்! Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் எடவா பகுதியைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர். கேரளா, இந்தியாவில் பல மாநிலங்கள், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இசைக்குழு மூலம் சக்சேரியை நிகழ்த்தியுள்ளார். ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார் பஷீர்.

இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் நேற்று முன் தினம் ப்ளூ டைமண்ட் இடைக்குழுவின் சார்பில் கச்சேரி நடந்தது. அப்போது பஷீர் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென சரிந்து கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இசைக்குழுவினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பஷீர் உயிரிழப்பு கேரள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர். திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பஷீரின் உயிர் பிரிந்த கடைசி நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories