தமிழ்நாடு

“ஆத்திகர்களும், நாத்திகர்களும் உருவாக்கிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி” : அமைச்சர் சேகர்பாபு பேச்சு !

“ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர உருவாக்கிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி” என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

“ஆத்திகர்களும், நாத்திகர்களும் உருவாக்கிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி” : அமைச்சர் சேகர்பாபு பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி குன்றத்தூர், திருநாகேசுவரம், தொண்டர் சீர்புராணம் தெய்வச் சேக்கிழார் பெருமான் அரசு மூன்றாம் நாள் விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வாழ்த்துரை நிகழ்த்தி, திருமுறை ஓதுதல் போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.

பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசியதாவது, சைவம், வைணவம் என இரு பிரிவுகள் இருந்தாலும். சைவம் என்பது தமிழைச் சேர்ந்த வழிபாடு என்பதால் இந்த ஆட்சியும் கழகத் தலைவர் ஆட்சியும் ஒரு தமிழ் சார்ந்த ஆட்சி என்பதால், தமிழை மையமாக வைத்து வாழ்ந்து மறைந்த தெய்வங்களாக போற்றப்படுகின்ற அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதில் தமிழ்நாட்டு முதலமைச்சர் இருக்கிறார் என்றால் மிகையாகாது.

18 சித்தர்களில் முதன்முறையாக திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி கமலமுனி சித்தர், சங்கரன் கோயில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் பாம்பாட்டி சித்தர், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சுந்தரானந்த சித்தர் ஆகிய 3 சித்தர்களுக்கு விழா எடுப்போம் என்றும், முதல் நிகழ்வாக திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி கமலமுனி சித்தருக்கு வருகின்ற 4 ஆம் தேதி அரசு விழா எடுக்கப்படுகிறது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு 2 சித்தருக்கு அரசு விழா எடுக்கப்படும் என்றும் தமிழ்நாட்டு முதல்வர் அறிவித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறையை பொருத்தளவில் ஆத்திகர், நாத்திகர் என்ற பிரிவு இல்லை அவருக்கு அனைவரும் சமம். ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒன்று சேர உருவாக்கியது தான் திராவிட மாடல் ஆட்சி தெய்வச் சேக்கிழார் பெருமான் விழாவில் அமைச்சர் தெரிவித்தார்.

“ஆத்திகர்களும், நாத்திகர்களும் உருவாக்கிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி” : அமைச்சர் சேகர்பாபு பேச்சு !

கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையில் பெரியபுராணம் கண்ட சேக்கிழார் பிறந்த தலமான குன்றத்தூரில் அவரின் திருநட்சத்திரத்தையொட்டி ஆண்டுதோறும் பத்து நாட்களுக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு நாள் மட்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல், மூன்று நாட்களுக்கு அரசு விழாவாக வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று 2022 - 2023 சட்டமன்ற அறிவிப்புகளில் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 26.05.2022 அன்று சேக்கிழார் பெரிதும் வலியுறுத்தவது சமய நெறியே! சமுதாய நெறியே!! என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும், 27.05.2022 அன்று சேக்கிழாரும், தமிழிசையும் சிறப்பு சொற்பொழிவும், நிறைவு விழாவாக 28.05.2022 குன்றத்தூரில் நடைபெற்ற மூன்றாம் நாள் அரசு விழாவில், மங்கள இசை, இறை வணக்கம், திருமதி.பாரதி திருமகன் குழுவினரின் வில்லுப்பாட்டு ஆகியவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தெய்வப்புலவர் சேக்கிழார் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவனடியார், சிவபக்தரான அவர் அறுபத்து மூன்று சைவநாயன்மார்களின் வாழ்க்கை கதைகளை விவரிக்கும் பெரிய புராணத்தை தொகுத்து எழுதினார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். சோழநாட்டு திருநாகேஸ்வரம் என்னும் ஊரில் எழுந்தருளிய இறைவனிடம் பேரன்பு பூண்டு நாள் தோறும் வழிப்பட்டு வந்தவர் அங்கு நடராஜ சபையையும், மண்டபத்தையும் கட்டி பல திருப்பணிகளையும் செய்தவர். அரசியல் பணியிலிருந்து விடுபட்டு ஊர் திரும்பி தாம் பிறந்த குன்றத்தூரில் திருநாகேஸ்வரம் என்ற பெயரில் திருக்கோயில் அமைத்து வட திருநாகேஸ்வரம் எனப் பெயரிட்டு வழிப்பட்டு வாழ்ந்தவர்.

திருக்கோயிலின் மூலவர் சேக்கிழார் பெருமானுக்கு பிரதி மாதம் பூசம் நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவில் 4 வது நாள் திருவிழாவின் போது சேக்கிழார் தான் கட்டிய திருநாகேஸ்வரம் திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதாக ஒரு ஐதீகம். இப்படி பட்ட பெருமாகனாருக்கு இந்து சமய அறிநிலையத்துறை 3 நாள் அரசு விழா நடத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இனி வருங்காலங்களில் ஆண்டு தோறும் சீரும் சிறப்புமாக அரசு விழா நடைபெறும் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories