தமிழ்நாடு

PM மோடியை வரவேற்க சென்றபோது தகராறு.. டிங்கரிங் கடையை சூறையாடிய பா.ஜ.க நிர்வாகிகள்.. 4 பேருக்கு ‘காப்பு’ !

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் 31,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி வைத்தார்.

PM மோடியை வரவேற்க சென்றபோது தகராறு.. டிங்கரிங் கடையை சூறையாடிய பா.ஜ.க நிர்வாகிகள்.. 4 பேருக்கு ‘காப்பு’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் 31,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி வைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதி பா.ஜ.க துணைத்தலைவர் விஜயகுமார் தொண்டர்களுக்காக வாகனம் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த இந்த வாகனத்தை ஆனந்த் டிங்கரிங் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வாகனத்தைக் கொஞ்சம் தள்ளி நிறுத்துமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், டிங்கரிங் கடை உரிமையாளர் ஆனந்த்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர்

பின்னர் அவர்கள் அங்கிருந்து வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். மேலும் ஆனந்த்தும் வேறொரு வேலையாக வெளியூர் சென்று விட்டார். இதையடுத்து பிரதமர் மோடியை வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு விஜயகுமார் தனது ஆதரவாளர்களுடன் ஆனந்தை தேடியுள்ளனர்.

அப்போது, ஆனந்த்தின் நண்பர் கோகுல் டிங்கரிங் கடையில் அமர்ந்திருந்தார். அப்போது விஜயகுமார் மற்றும் ஆதரவாளர்கள் ஆனந்த் எங்கே என கேட்டுள்ளனர். இதற்கு அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இதனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கோகுலை சரமாரியாகத் தாக்கியுள்ளது. பின்னர் டிங்கரிங் கடையை அடித்துச் சூறையாடியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, பா.ஜ.க துணைத் தலைவர் விஜயகுமார், பா.ஜ.க நிர்வாகி கோபி, தனுஷ், சூர்யா ஆகிய 4 கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories