இந்தியா

ராக்கி பாயால் ஈர்க்கப்பட்ட சிறுவன்.. ஒரே நேரத்தில் 10 சிகரெட் பிடித்ததால் நடந்த விபரீதம்!

நாயகன் ராகி பாய் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்தால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ராக்கி பாயால் ஈர்க்கப்பட்ட சிறுவன்.. ஒரே நேரத்தில் 10 சிகரெட் பிடித்ததால் நடந்த விபரீதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கிய KGF படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து ஏப்ரல் மாதம் KGF 2 படம் வெளியோ ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 திரைகளில் வெளியாகி ரூ.1,200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகன் ராகி பாய் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்தால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கடந்த வாரம்தான் KGF 2 படம் பார்த்துள்ளார். இதில் கதாநாயகனாக வரும் ராக்கி பாய் மீது சிறுவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னை ராக்கி பாய் போல் கெத்தாக இருக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

இந்த படத்தில் ராக்கி பாய் அதிக சிகரெட்டுகள் பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதனால் அச்சிறுவன் சிகரெட் பிடித்தால் கெத்து என நினைத்துள்ளார். இதனால் அந்த சிறுவன் நேற்று இரவு ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்துள்ளார்.

இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே சிறுவனது பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். தற்போது சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சினிமாவில் வரும் காட்சிகளை உண்மை என நம்பி யாரும் இதை முயற்சி செய்யக் கூடாது என்ற விழிப்புணர்வு இன்னும் போதுமானதாக இல்லை என்பதையே இந்த சம்பவம் நினைவூட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories