தமிழ்நாடு

“7 வயது சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்த 65 வயது சித்த மருத்துவர்” : போக்சோ வழக்கில் சிக்கிய பின்னணி என்ன?

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தமருத்துவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

“7 வயது சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்த 65 வயது சித்த மருத்துவர்” : போக்சோ வழக்கில் சிக்கிய பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண். இவரது ஏழு வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தனர்.

அப்போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்துவிட்டு சிறுமியை யாரோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சித்தா கிளினிக் நடத்தி வரும் பாலசுப்பிரமணியம் 65 என்ற நபர் சிறுமியை தனது சித்தா கிளினிக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதை கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் பாலசுப்பிரமணியத்தை நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories