தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை செய்து மீனவப் பெண் எரித்துக்கொலை.. வடமாநில இளைஞர்களை தட்டி தூக்கிய போலிஸ்!

ராமேஸ்வரம் அருகே மீனவப்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞர்களை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்து மீனவப் பெண் எரித்துக்கொலை.. வடமாநில இளைஞர்களை தட்டி தூக்கிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், கடற்கரை பகுதியில் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை வழிமறுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத மணைவியைத் தேடி அவரது கணவர் அழைந்துள்ளார். அப்போது கடற்கரை அருகே இருந்தே முட்புதரின் பாதி எரிந்த நிலையில் தனது மனைவியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்தபோலிஸார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலிஸார் வழக்குபதிவு விசாரணை நடத்தியதில், இறால் பண்ணையில் வேலைப்பார்த்த 2 இளைஞர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். அதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோர் என தெரியவந்தது. மேலும் மீனவப்பெண்ணின் நகைகளை திருடி விற்க முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. மேலும் அவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories