தமிழ்நாடு

ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த பெண்குரங்கு.. இளைஞரின் மனிதாபிமான செயல் : நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!

புதுச்சேரியில், காயம் பட்ட குரங்கிற்கு இளைஞர் ஒருவர் முதலுதவி செய்து கால்நடை மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த பெண்குரங்கு.. இளைஞரின் மனிதாபிமான செயல் : நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு கிராமத்தில் பெண் குரங்கு ஒன்றுக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்துக் கொண்டிருந்தது. இதை அந்தவழியாகச் சென்று இளைஞர் ஒருவர் கவனித்துள்ளார். பிறகு சற்றும் தாமதிக்காமல் உடனே தனது தொலைப்பேசியை எடுத்து கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர், இந்த இளைஞர் குரங்கின் கை, கால்களைக் கட்டி முதலுதவி அளித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்கள் வருவதற்குள்ளே, மயக்கம் தெளிந்தவுடன் குரங்கு அங்கிருந்து சென்றுவிட்டது.

காயமுற்றிருந்த குரங்கிற்கு இளைஞர்கள் துரிதமாகச் செயல்பட்டு சிகிச்சை அளித்த உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம மனிதர்களுக்கு உதவி செய்வதற்கா தயங்கிவரும் இந்த காலத்தில் குரங்கின் உயிரைக் காப்பாற்றிய இளைஞருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories