தமிழ்நாடு

நேர்மை தவறாத ஆம்புலன்ஸ் ஊழியர்: ஆதரவற்ற மூதாட்டியின் சேமிப்பு பணத்தை பத்திரமாகமீட்டு ஒப்படைத்த நெகிழ்ச்சி

நேர்மை தவறாத ஆம்புலன்ஸ் ஊழியர்: ஆதரவற்ற மூதாட்டியின் சேமிப்பு பணத்தை பத்திரமாகமீட்டு ஒப்படைத்த நெகிழ்ச்சி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரி அருகே நேற்று முன்தினம் சாலையோரத்தில் பிச்சை எடுத்து வந்த மூதாட்டி, மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் முதலுதவி செய்து மூதாட்டியை பிழைக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் மூதாட்டி மயங்கியபடியே கிடந்துள்ளார்.

இதனை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூதாட்டிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றியதை அடுத்து அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மூதாட்டி பிச்சை எடுத்து சேமித்து வைத்த பணத்தை அவர் இருந்த இடத்திலேயே தவறவிட்டிருக்கிறார். அந்த பணத்தை பாதுகாத்த ஆம்புலன்ஸ் உதவியாளர் மருத்துவமனையில் உள்ள மூதாட்டியிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டி மயக்க நிலையில் இருந்த பொழுது அவரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் உதவியாளர் மணிகண்டன் மூதாட்டியின் பணத்தை பத்திரப்படுத்தி எடுத்து வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சுமார் 71 ஆயிரம் ரூபாய் கொண்ட பணம் மூதாட்டியுடதுதான் என்பதை உறுதி செய்த பிறகு மருத்துவமனையில் உள்ள பாட்டியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்ததோடு அவரது பணத்தையும் ஒப்படைத்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories