தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையில் 22 மணி நேர பயணம்.. ஆபத்தான பாதையில் மலை ஏறி ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு!

வெள்ளியங்கிரி மலை ஏறி ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெள்ளியங்கிரி மலையில் 22 மணி நேர பயணம்.. ஆபத்தான பாதையில் மலை ஏறி ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு கோயில்களுக்கு நேரடியாகவே சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அதேபோல், தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் ஆய்வு செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. இந்த மலையில் சிவபெருமான் கோயில் உள்ளது. இந்நிலையில், நேற்று வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு மலை மீது ஏறிச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

நேற்று காலை 7 மணியளவில் மலை ஏறத் தொடங்கி கோயில்களை ஆய்வு செய்துவிட்டு இன்று அதிகாலையிலேயே அமைச்சர் சேகர்பாபு கீழே இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட 22 மணி நேரம் நடைப்பயணம் செய்து வெள்ளியங்கிரி மலைக்கோயிலை ஆய்வு செய்துள்ளார்.

இந்த மலைப் பாதைகள் ஆபத்தானவை என்பதால் அதிகாரிகளே மலை ஏறி ஆய்வு செய்யக் கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் அமைச்சர் சேகர்பாபு எவ்வித தயக்கமும் இன்றி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்துள்ளார். அமைச்சர் சேகர்பாபுவின் இந்த நடவடிக்கைக்கு அதிகாரிகள், பக்தர்கள் உட்படப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,"2022-23-ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி, இயற்கையே இறைவனாக உள்ள கோவை மாவட்டம், அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய இன்று (22.05.2022) மலையேறி பார்வையிட்டோம்" என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories