தமிழ்நாடு

தாலி கட்டிய கையோடு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மணமகன்: திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தாலி கட்டி முடித்ததும் உடனடியாக தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு மணிகண்டன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்றிருக்கிறார்.

தாலி கட்டிய கையோடு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மணமகன்: திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையிடம் வாழ்த்து பெற்ற மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் மணிகண்டனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. நேற்று முன் தினம் மணிகண்டனின் தந்தை செல்வமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தாலி கட்டிய கையோடு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மணமகன்: திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அதே நேரத்தில் மிகுந்த மனக்கவலையுடன் தந்தை இல்லாமல் திருமணம் நடைபெறுகிறது என எண்ணி மணிகண்டன் வேதனைப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று நாச்சியார்கோவிலில் மணிகண்டன் - சுஜாலினி திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இதனையடுத்து தாலி கட்டி முடித்ததும் உடனடியாக தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு மணிகண்டன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தனது தந்தை செல்வமணியிடம் வாழ்த்து பெற்றார்.

தாலி கட்டிய கையோடு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மணமகன்: திருவாரூரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த நிகழ்வு மருத்துவமனையில் இருந்த பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பெற்றோர்களை மதியாமல் திரியும் சில பிள்ளைகளுக்கு மத்தியில் மணிகண்டன் தேடி வந்து வாழ்த்து பெற்றதற்கும் அங்கிருந்த மக்கள் வரவேற்றும் பாராட்டியிருக்கிறார்கள். ,ஏலும்

banner

Related Stories

Related Stories