தமிழ்நாடு

ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட பயணி: சென்னை மவுன்ட் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன? பொதுமக்கள் அதிர்ச்சி!

பயணி ஒருவரின் உயிரை ரயில்வே போலிஸார் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட பயணி: சென்னை மவுன்ட் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன? பொதுமக்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை பரங்கிமலை (செயின்ட் தாமஸ் மவுன்ட்) ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் உயிரை ரயில்வே போலிஸார் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

சென்னை ஆதம்பாக்கம் இபி காலனி பகுதியை சேர்ந்தவர் புரான் பாஷா (வயது 54). இவர் கடந்த 9ஆம் தேதி கூடுவாஞ்சேரி செல்வதற்காக செயின்ட் தாமஸ் மவுன்ட் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது புரான் பாஷா ஓடும் ரயிலில் ஏற முயன்றிருக்கிறார். இதனால் சமநிலை தவறி ஓடும் ரயில் மீது விழுவதைப் போல் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் மீனம்பாக்கம் செல்வதற்காக ரயிலில் ரயில்வே காவலர்கள் அனுஷா, சுமேஷ் மற்றும் ஊழியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் ஓடும் ரயில் மீது விழுவதை பார்த்ததும் அனுஷா மற்றும் சுமேஷ் அந்த நபரை நடைமேடை பக்கமாக தள்ளி விட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செயின்ட் தாமஸ் மவுன்ட் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வயதானவரின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலிஸாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories