தமிழ்நாடு

5 வயது வரை இலவச பயணம்.. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் கட்டண சலுகை.. அசத்தலான போக்குவரத்துறை அறிவிப்புகள்!

5 வயது வரை இலவச பயணம்.. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் கட்டண சலுகை.. அசத்தலான போக்குவரத்துறை அறிவிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்த அறிவிப்புகள்:

1.தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை/பண பரிவர்த்தனையற்ற பயணச் சீட்டு முறையை அறிமுகப்படுத்துதல்.

2. பயண கட்டண சலுகை அனுமதிச் சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குதல்.

3.சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனை நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்துதல்.

4. அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத்துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற்காக அரசு நடமாடும் பணிகளை உருவாக்குதல்.

5. அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் உருவாக்கப்படும்.

6. மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பேருந்து முனையங்கள் இணையவழி பயணியர் தகவல் மூலம் காட்சிப்படுத்தப்படும்.

7.தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பசுமை பெட்டிகளை வாடகைக்கு விடுதல்.

8. இணையவழி பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இரு வழி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கான கட்டணம் சலுகை.

9. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்துதல்.

10. திருச்சிராப்பள்ளி,விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைத்தல்.

5 வயது வரை இலவச பயணம்.. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் கட்டண சலுகை.. அசத்தலான போக்குவரத்துறை அறிவிப்புகள்!

11. பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமத்தில் வாகன வகை ஒப்புவிப்பு செய்தல், போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தை தெரிவித்தல் மற்றும் பதிவு சான்றிதழ் தவணைக் கொள்முதல் விவரத்தினை மேற்குறிப்பு செய்தல் ஆகிய சேவைகளை கணினி வழியாக பெறுதல்.

12.பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவிகள் பொருந்துதல்.

13.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உருவாக்குதல்.

14.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உருவாக்குதல்.

15.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தினை வட்டார போக்குவரத்து அலுவலக தரம் உயர்த்துதல்.

banner

Related Stories

Related Stories