தமிழ்நாடு

“ஆட்டோமொபைல் துறையில் NO.1 இடத்தைப் பிடிக்க போட்டா போட்டி”: முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய ‘TATA’!

டாடா மோட்டார்ஸ் விற்பனை சென்ற ஆண்டோடு ஒப்பிடும் போது, இந்தாண்டும் ஏப்ரல் மாதம், 74 % அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

“ஆட்டோமொபைல் துறையில் NO.1 இடத்தைப் பிடிக்க போட்டா போட்டி”: முன்னணி நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய ‘TATA’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டால் முன்னணி நிறுவங்களின் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தில் ஏப்ரல் மாதம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் டாடா மோட்டார்ஸ் விற்பனை சென்ற ஆண்டோடு ஒப்பிடும் போது, 74 % அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் விற்பனை 72,486 ஆக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 39,401 வாகனங்கள் மட்டுமே விற்பனையானதாக கூறப்படுகிறது.

அதேபோல், மஹிந்தரா டிராக்டர் விற்பனை 49 % அதிகரித்து 39,405 ஆக விற்பனையாகியுள்ளது. மேலும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 44,001 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வெளிநாடுகளுக்கு 12,200 வாகனங்களை ஏற்றுமதியும் செய்துள்ளது. இருந்தாலும் ஏப்ரல் மாதம் மொத்தமாக 5 சதவீதம் வரை வாகன விற்பனை சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுசுகி, மஹிந்தரா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் குறைந்த அளவு சரிவை சந்தித்திருந்தாலும், இந்தியாவின் மொத்த விற்பனையில் பெரும் பங்கை இந்நிறுவனங்கள் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories