தமிழ்நாடு

‘யப்பா என்னா வெயிலு...’ : ‘கத்திரி வெயில்’ இன்று முதல் ஆரம்பம்.. 25 நாட்களுக்கு அனல் காற்று வீசும்!

தமிழ்நாட்டில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில், ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில், இன்று முதல் தொடங்கியது.

‘யப்பா என்னா வெயிலு...’ : ‘கத்திரி வெயில்’ இன்று முதல் ஆரம்பம்.. 25 நாட்களுக்கு அனல் காற்று வீசும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் ஏப்ரல் தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கோடை வெயில் தொடங்கிய உள்ளதால் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வராமல் இருப்பது காண முடிகிறது.

அதேசமயம், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நீடிக்க இருக்கிறது. இதனால், இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

25 நாட்களுக்கு கத்திரி வெயில் நீடிக்க உள்ள நிலையில், 24ந்தேதி வரை அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இயல்பை வெப்பம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது. இது 122 ஆண்டுகளில் இல்லதா வெப்பநிலை பதிவாகும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories