தமிழ்நாடு

“தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுக்கும் உலகப் பெரு நிறுவனங்கள்”: ‘Times of India’ பாராட்டு!

“உலகின் வல்லமை மிக்க பெரும் நிறுவனங்கள் மறு கண்டுபிடிப்பு செய்யும் சென்னை’’ என்ற தலைப்பில் “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில ஏடு பாராட்டி கட்டுரை தீட்டியுள்ளது.

“தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுக்கும் உலகப் பெரு நிறுவனங்கள்”: ‘Times of India’ பாராட்டு!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகப் பெரு நிறுவனங்கள் சென்னையை மறு கண்டுபிடிப்பு செய்துள்ளன. உள்ளூர்திறமைகளாலும், எளிதாகப் பணியாற்றும் தன்மையாலும் ஈர்க்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பெரும் (மகா) தொழில் திறன்மையங்களை உயர்ந்த மதிப்பும், அதிகவருவாயும் கொண்ட வேலை வாய்ப்புகளைவழங்கி அமைத்து வருகின்றன என்று “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேடு எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து “உலகின் வல்லமை மிக்க பெரும் நிறுவனங்கள் மறு கண்டுபிடிப்பு செய்யும் சென்னை’’ என்ற தலைப்பில் “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில ஏடு தனது நேற்றைய (2.5.2022) இதழில் அந்தக்குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சிந்து ஹரிஹரன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

தரமான தொழில்நுட்பத் திறமை, சிறப்பான உள்கட்டமைப்பு மற்றும் ஒப்பு நோக்கில் வாழ்க்கைப் செலவு குறைவான நிலை ஆகியவை பன்னாட்டு நிறுவனங்களின் தேடுதல் சாதனத்தில் தங்கள் பின்னணி அலுவலகங்ளையும் அல்லது கடலுக்குள் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு உகந்த இடமாகவும் சென்னையைக் கண்டுபிடிக்கச் செய்துள்ளது. ஆனால், இந்த மாநகர் பெங்களூருவிடமும், ஹைதராபாத்திடமும் 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் “கூக்லே’’, “இன்டெல்’’, “வோல்சாம்’’ “அமேசான்’, “பேஸ் புக்’’ மற்றும் பல இதர நிறுவனங்களின் தொழில்நுட்ப உலகத் திறன் மையங்களை இழந்துள்ளது. தொற்று நோய் ஊரடங்குக்குப் பிறகு உள்ள இந்தக் காலம் உலகத் திறன் மையங்களின் வளர்ச்சி அலையில் சவாரி செய்வது சென்னைக்கு உரியதாகும்.

“தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுக்கும் உலகப் பெரு நிறுவனங்கள்”: ‘Times of India’ பாராட்டு!

கடந்த இரண்டு மாதங்களில் 10க்கு மேற்பட்ட உலக நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில் நுட்ப மையங்களை அமைத்தோ அல்லது ஏற்கனவே இருந்த நிறுவனங்களை விரிவுபடுத்தியோ உள்ளன. இந்தப் பட்டியலில் “அமேசான்’’, “ஜூம் இன்ஃபோ’’, “ஜூம்’’,“கேபிடஸ்’’ டெரிடென்ஸ் “நீல்சென் ஐ கியூ’’ டிரிம்பிள்’’ “மிட்சோ கோ’’ மற்றும் பி.என்.ஒய். மெலான் ஆகியவை அடங்கும். நாங்கள் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட தேவையான பணியாளர்களை விட அதிகமானவர்களை இங்கேயே கண்டு பிடித்துள்ளோம். மேலும் பலரைத் தேர்ந்தெடுக் கவுள்ளோம் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. இது சென்னையின் திறமைக் குவியலுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலாகும். ஆனால், வழி

காட்டி அமைப்பு (“கைடன்ஸ் பீரோ’’) போன்ற அமைப்புகளைக் கையாளுவதும் உதவியாக உள்ளது. உலகத் திறன் மையங்கள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்குவெவ்வேறு கொள்கைகளின் கீழ் பணியாற்றும் ஒரே மாநிலம் தமிழ் நாடேயாகும். அவை வெளியிடப்படும் போது மேலும் அதிக அளவில் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும். ஹைதராபாத்தில் தன்னுடைய மிகப்பெரிய அலுவலகத்தை அமைத்துள்ள “அமேசான்’’ நிறுவனம் சென்னையை தனது இரண்டாவது மிகப்பெரிய ஆதார இடமாகக் கொண்டுள்ளது.

அது சுமார் 6000 தொழிலாளர்களைத் தங்க வைப்பதற்காக உலக வர்த்தக மையத்தில் பல மாடிகளை ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூருவில் ஒரு தொழில்நுட்ப மையத்தைக் கொண்டுள்ள “ஜூம்’’ நிறுவனம், இரண்டாவது முக்கிய இடமாகச் சென்னையைத் தேர்ந் தெடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ளபொறியாளர்களின் அணியோடு பணியாற்று வதன் மூலம் “ஜூம்’’ நிறுவனத்தின் மென் பொருள் மையம் சிறப்பாகச் செயல்படும் “நாங்கள் இந்த மையத்தின் நிலைகளை. ஏற்கனவே திறந்து விட்டோம். பணிய மர்த்துதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’’ என்று “ஜூம்’’ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் பொறியாளர்கள் பிரிவின் தலைவர் வேல்ச்சாமி சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது வெறும் அடிப்படை யான தொழில்நுட்ப / பொறி யாளர் பணிகள் மட்டுமல்ல; உயர்ந்த மதிப்புக்குரிய பணி களும் சென்னையின் வழியில் வந்து கொண்டிருக்கின்றன “நீல்சன் ஐ.க்யூ’ நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நிறுவனம் தன்னுடைய 2000க்கு மேற்பட்ட அலுவலர்களைக் கொண்ட மிகப்பெரிய உலக முக்கிய இடத்தை ஏப்ரல் மாதம் தொடங்கியது. “இங்கே நாங்கள் புள்ளி விபர அறிவியல், பொறியியல், ஏ.ஐ. மற்றும் எம்.எல். ஆகியவற்றை மிகவும் கூர்மையாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் விரிவான சில்லறை வணிகம் மற்றும் கடைகளின் பழக்க வழக்கங்களைப் புரிந்து கொள்வதுடன் வழங்க முடியும்’’ என்று நீல்சன் ஐ.க்யூவின் உலக சி.டி.ஓ.(தலைமை அதிகாரி) மொஹித் கபூர் கூறுகிறார்.

இந்தச் செயல்பாடு சென்னையில் மட்டுமல்ல; உதாரணமாக “டிலாய்ட் இந்தியா’’ நிறுவனம் தன்னுடைய “திறன் மேம்பாட்டு மையங்களில்’’ ஒன்றை கோயமுத்தூரில் அமைத்துள்ளது. ஒரு லட்சம் மென்பொருள் மையங்கள் எங்களுடைய தொழில் நுட்பங்களின் திறமைகளை மேம்படுத்தும், அத்துடன் வாடிக்கையாளர்களுக்கான முக்கியப்பகுதி களான சைபர், கிளவுட், ஆய்வுகள் (அனா லிஸ்டிக்ஸ்) ஏ.ஐ. மற்றும் ஈ.ஆர்.பி. பகுதிகளில் வழங்குவதையும் மேம்படுத்தும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுக்கும் உலகப் பெரு நிறுவனங்கள்”: ‘Times of India’ பாராட்டு!

“இதர மாநிலங்களுடன் ஒப்பிடுவதில் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக்கொள்ளாமல் தமிழ்நாடு தன்னுடைய சொந்த பலங்களில் சிறந்து விளங்கி வருகிறது’’ என்று தகவல் தொழில்நுட்பத் துறை (‘ஐ.டி.) செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார். உலக திறன் மையங்கள் இங்கே அமைக்கப்பட்டு வருவதுடன் உயர் தரமான மற்றும்உயர்த அளவில் ஊதியம் அளிக்கும் வேலை வாய்ப்புகளையும் அளித்து வருவதாகவும் அவர்கள் வெறுமனே கடலுக்குள் மட்டும் மையங்களை அமைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“தமிழ்நாடு உலகத் திறன் மையங்களின் முக்கிய இடமாக இருபது ஆண்டுகளுக்குமுன்பு திகழ்ந்து வந்த போது, அமெரிக்க வங்கியின் சிட்டி குழுமம் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவை தொடர்ச்சியாக மாநிலத்திற்குள்ளும் அண்டை மாநிலங்களுக் குள்ளும் நுழைந்து சந்தைப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்மூலம் தொழில் நுட்பப் பெரு நிறுவனங்களை ஈர்த்தன. அதன் மூலம் தமிழ்நாடு வர்த்தக உலக திறன் மையங்கள் இரட்டிப்பாகி இருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது என்று `காக்னிசன்ட் இந்தியா’ நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரர் ராம்குமார் ராமமூர்த்தி கூறியுள்ளார்.

எனினும் `ஸின்னோவ்’ நிறுவனத்தின் அங்கமான அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் உள்ள உலக திறன் மையங்களில் 10 சதவிகிதத்தைத் தான் தமிழ்நாடு தனது பொறுப்பில் பெற்றுள்ளது. பகுதி வாரியான கலப்பில் மென்பொருள், தானியங்கிகள் மற்றும் தொழில் அமைப்புகள் கணக்கில் ஏறக்குறைய 50 சதவிகித உலகத் திறன் மையங்கள் தமிழ் நாட்டில்தான் உள்ளன. வல்லுநர்களை நியமிக்கும் நிறுவனமாக எக்ஸ்ஃபெனோ, “திறமைகளைக் கற்பித்துக் கூறுவதில் இங்கு பெங்களூருவில் உள்ள

கடுமையான போட்டியை விட 2.3 சதவீதம் தான் குறைவாக உள்ளது. தமிழ்நாடு வரவேற்கும் கலவையான மாநில அரசின் கொள்கைகள், உயர்தரமான உள் கட்டமைப்பு வசதிகள், நிதிநிலையில் கவர்ச்சிகரமான முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஈ.ஆர்.டி. நோக்கங்களைக் கொண்ட உலகத் திறன் மையங்களை ஈடுபடச் செய்யக்கூடிய

மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளது. சென்னைக்கும் கோயம்புத்தூருக்கும் இடையில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகத் திறன் மையங்களில் திறமை ஆற்றல் கொண்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட உழைப்பாளிகள் இயங்கி வரு கின்றனர். என்று `எக்ஸ்ஃபினேர்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் கமல்கரந்த் தெரிவித் துள்ளார்.

“தமிழ்நாடு ஏறக்குறைய உலகத் திறன் மையத்திற்கு வந்தபோது, கடைசி வரிசையில் இருக்கும் மாணவனைப் போலத்தான் இருந்தது. மூத்த திறமைசாலி யாரும் சென்னைக்கு மறுபடியும் அனுப்பி வைக்கும் வகையில் மிகவும் வரவேற்கத்தக்கதாக இல்லை’’ என்று “ஸின்னோவ்’’ நிறுவனத்தின் பங்குதாரர் முகமது பெரஸ்கான் கூறுகிறார். “எனினும் ஐ.டி./பி.பி.எம். திறமைகள் இந்த மாநிலத்தில் இருப்பதும் இதர சந்தைகள் நிறைவை அடைந்திருப்பதும் அதற்குச் சாதகமான நிலைகளாக உள்ளன’’ என்று அவர் கூறியுள்ளார்.

இன்னமும் கூட இந்த மாநிலத்தைப்பொறுத்தவரை தீர்க்கப்பட வேண்டிய அறிவுபூர்வ பிரச்சினை உள்ளது. அது தீர்க்கப்பட்டு அது இன்னமும் வலிமை யான உலகத் திறன் மைய கலாச்சாரச் சமுதாயமாக உயர்த்தப்படுவதற்கு ஊக்கு விக்கப்பட்டு, நிகர உழைப்பின் திறன்களால் பலனடையவேண்டும்’’ என்று அவர் மேலும் கூறியுள்ளார். இவ்வாறு “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

“தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுக்கும் உலகப் பெரு நிறுவனங்கள்”: ‘Times of India’ பாராட்டு!

இந்தக் கட்டுரையின் இணைப்பாக “தனித் திறமை மையங்களின் கூடாரம்!’’ என்ற ஒரு செய்தியும் இடம் பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

உலகத் தனித் திறமை மையங்களின் கூடாரம்!

தமிழ்நாட்டில் 2022 ஏப்ரலின்படி சுமார் 150 உலக தனித் திறமை மையங்கள் உள்ளன: ஸின்னோவ் கடந்த 2 மாதங்களில் மட்டும் 10க்கு மேற்பட்ட உலகத் திறன் மையங்கள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளன.

 இவற்றுள் அமேசான், ஜூம் இன்ஃபோ, கேபிடஸ், ஜூம், டிரடென்ஸ் எ.ஐ., நீல்சன் ஐ.க்யூ, டிரிம்பிள், மிட்சோகோ ஆகியவை அடங்கும்.

 சமீபத்திய லாபங்கள் அன்னியில் இந்த மாநிலம், இந்தியாவில் உள்ள மொத்த உலகத்திறன் மையங்களில் 10 சதவிகிதத்தை தன்னிடம் பெற்றுள்ளது. அவை சென்னை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரையில் அமைந்துள்ளன என்று ஸின்னோவ் கூறுகிறது.

 மென்பொருள், தானியங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள் கணக்கில் ஏறக்குறைய 50 சதவிகிதத்தையும் உலகத் திறன் மையங்களில் பெற்றுள்ளது. அத்துடன் கிராமப்புற வளர்ச்சி யில் பல்வேறு வகையான தகவல்களையும் பெற்றுள்ளது ஆதலால் ஆழமான தொழில் நுட்பம் தேவைப்படுகிறது.

 ஸின்னோவ் 100க்கு மேற்பட்ட உலகத்திறன் மையங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது.

 இதில் ஐதராபாத்தும் பெங்களூரும் பெரும் பகுதி வாய்ப்பை பெறும். இதில் சென்னை 3வது இடத்தில் உள்ளது.

 உலகத் திறன் மையங்களைக் கொண்டு வருவதில் தமிழ்நாட்டின் முயற்சிகளை எல்லா கண்களும் கவனித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் கிராமப்புற வளர்ச்சிக் கொள்கையும் இந்த வளர்ச்சிக்கு எரி பொருளாகஇருக்கும். இத்துடன் 18 நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் செய்முறைப் பயிற்சி (அப்ரன்டிஸ்)யில் இந்த ஆண்டின் முதல் பாதியில் சென்னை முதலிடம் வகிக்கிறது என்றும் கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் நகரங்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

Related Stories