தமிழ்நாடு

ரூ.1.50 லட்சம் பணத்தைத் தவறவிட்ட வடமாநில வியாபாரி.. 1 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த தமிழ்நாடு போலிஸ்!

வட மாநில வியாபாரி தவறவிட்ட ரூ.1.50 லட்சம் பணத்தை போலிஸார் 1 மணி நேரத்திலேயே மீட்டு அவரிடம் கொடுத்துள்ளனர்.

ரூ.1.50 லட்சம் பணத்தைத் தவறவிட்ட வடமாநில வியாபாரி.. 
1 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த தமிழ்நாடு போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வட மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் குத்வானி. இவர் சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை வாங்கி வட மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் வியாபாரத்தைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று சிவகாசி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். பிறகு வீட்டிற் சென்று வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணத்தை எடுக்கும்போது அது காணாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் உடனே இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில், இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பணப்பையை வழிப்போக்கர் எடுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது. இதையடுத்து போலிஸார் அந்த நபரைக் கண்டுபிடித்து அவரிடம் இருந்த பணப் பயை வாங்கினர்.

பின்னர், ஆனந்த் குத்வானியை காவல்நிலையம் வரவழைத்து அவரது பணத்தை போலிஸார் பத்திரமாக ஒப்படைத்தனர். தொலைத்த பணத்தை 1 மணி நேரத்திலேயே மீட்டுக் கொடுத்த போலிஸாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories