தமிழ்நாடு

Instagram பக்கத்தில் பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாசப் படங்களை அனுப்பி தொல்லை.. சைபர் கிரைமில் புகார்!

மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டா பக்கத்தில் ஆபாசப் படங்களை அனுப்புவதாகப் பிரபல நடிகரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Instagram பக்கத்தில் பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாசப் படங்களை அனுப்பி தொல்லை.. சைபர் கிரைமில் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் சகோதரரான இவர் 'மாசிலாமணி', 'காதலில் விழுந்தேன்', 'வல்லினம்' ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இவர் 2016ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி தொடர்ந்து இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

இந்த தம்பதியர், வாட்டர் பெர்த் முறையில் குழந்தை பெற்றெடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இது வைரலாகி பலரும் இருவரையும் பாராட்டினர். இந்த வீடியோவைப் பார்த்து பல தம்பதிகள் இந்த முறையிலேயே பிரசவம் பார்த்து வருகின்றனர்.

Instagram பக்கத்தில் பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாசப் படங்களை அனுப்பி தொல்லை.. சைபர் கிரைமில் புகார்!

இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் நடிகர் நகுலின் மனைவியின் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த மர்ம நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளனர். மேலும் அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசப் படங்களை மர்ம நபர் அனுப்பிய சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories