தமிழ்நாடு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல துணிக்கடை உரிமையாளர் மகன் கைது.. நடந்தது என்ன?

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிரபல துணிக்கடை உரிமையாளர் மகனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல துணிக்கடை உரிமையாளர் மகன் கைது.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை, தேனி, சங்கரன்கோவில், வத்தலகுண்டு என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான துணிக்கடையின் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனியில் இருக்கும் துணிக்கடை கிளையில் பணியாற்றும் பெண் ஒருவர், அந்தக் கடையின் உரிமையாளர் மகன் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், கடையின் உரிமையாளர் மகன் முருகன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலமுறை எல்லை மீறி நடந்து கொண்டுள்ளார். மேலும் எனக்குத் தாலியும் கட்டியுள்ளார். ஆனால் தற்போது முருகன் வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் முருகன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories