தமிழ்நாடு

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. 19 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் அதிரடி!

சென்னையில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. 19 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை திருவிக நகரை சேர்ந்த ஆகாஷ் என்ற 19 வயது வாலிபர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, ஆகாஷ் மீதான குற்றச்சாட்டுக்களை காவல் துறையினர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக கூறி, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராததொகையை பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories