தமிழ்நாடு

லீஸ்-க்கு வீடு தேடும் மக்களே உஷார்... 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடி அபேஸ்.. மோசடி மன்னனுக்கு வலை!

வீடுகள் லீசுக்கு  விடும் நிறுவனம் கோடி கணக்கில் மோசடி. 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார்.

லீஸ்-க்கு வீடு தேடும் மக்களே உஷார்... 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடி அபேஸ்.. மோசடி மன்னனுக்கு வலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொதுமக்கள் பலர் மாதம் வாடகை கொடுப்பதை விட ஒரு வீடு லீசுக்கு மொத்தமாக தொகையை கொடுத்துவிட்டால் வாடகை பிரச்சனை இல்லாமல் இருக்கலாம் என்பதால், அக்ரிமெண்ட் அடிப்படையில் பலர் வசித்து வருகின்றனர். இதை பயன்படுத்தி சிலர் அவர்களை ஏமாற்றவும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னையை அடுத்த மறைமலை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோரை தனியார் நிறுவனம் ஒன்று ஏமாற்றியுள்ளது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் சென்னையை சேர்ந்த ஒரு நபர் ASOSO என்ற நிறுவனத்தை  அறிவுடைநம்பி என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் மாதம் மாதம் குறிப்பிட்ட அளவு வாடகை தந்து விடுகிறோம் என வீட்டின் உரிமையாளர்களிடம் ஒரு அக்ரிமென்ட் போட்டு விடுகிறார்கள். அதன் பிறகு அந்த வீட்டை 11 மாதங்களுக்கு வீடு தேடி வரும் மற்றொரு நபருக்கு லீசுக்கு விட்டு விடுகிறார்கள். இதனால் சரியான வாடகை மாதம் மாதம் இந்த நிறுவனம் சார்பில் வீட்டின் உரிமையாளருக்கு கொடுத்து விடுவார்கள்.

ஆனால் வீட்டில் தங்கி இருப்பவர்கள் 11 மாதம் லீசுக்கு எடுத்து விடுவதால் 11 மாதம் கழித்து வீட்டை காலிசெய்து வாடிக்கையாளர்கள் கொடுத்த முன் பணத்தை திரும்ப தருவது, அல்லது மீண்டும் அந்த வீட்டை புதிய லீஸ் அக்ரிமென்ட் போடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்த நிறுவனம் பெருங்களத்தூர், மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் இதே போன்ற பல வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தில் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இதுபோன்று அக்ரிமெண்ட் போடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

லீஸ்-க்கு வீடு தேடும் மக்களே உஷார்... 100க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 கோடி அபேஸ்.. மோசடி மன்னனுக்கு வலை!

இந்த நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீட்டிற்கு மூன்று மாதம் தொடர்ந்து வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் தங்கி இருப்பவர்களௌ வீட்டை விட்டு வெளியேறுங்கள், காலி செய்து கொடுங்கள் எனக் கூறியுள்ளனர். ஆனால் 11 மாதம் பணம் திருப்பிக் கொடுக்காமல் வீட்டை வீட்டு உரிமையாளர்கள் காலி செய்யச் சொல்கிறார்கள் என நிறுவனத்திற்கு சென்று கேட்டபோது உங்கள் பணம் திருப்பித் தந்து விடுவோம் என கூறி அலைக்கழித்துள்ளனர்.

இதனால் செய்வதறியாமல் திகைத்த பொதுமக்கள்  மறைமலைநகர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு காவலர்களிடம் புகார் மனு அளித்தனர். சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்களிடம் இதுவரை 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நபர்கள் இதில் ஏமாந்து உள்ளதாகவும் இன்னும் அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு அதிகரிக்கலாம் என பாதிக்கப்பட்ட தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் தாம்பரம் மாநகராட்சி காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளாதகவும், பல பேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை ஆட்டையப்போட அறிவுடைநம்பியை கைது செய்து அவரிடமிருந்து தங்களுக்கு சேர வேண்டிய தொகையினை காவல்துறையினர் மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையின் முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்தனர். தற்போது மோசடி மன்னன்  தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்தால் மட்டுமே திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories